அமெரிக்கா வந்துவிட்டேன்., சில்லென வரவேற்ப்பு., வெள்ளை மாளிகையில் சந்திப்பு! பிரதமரின் அடுத்தடுத்த அப்டேட்!
Author
manikandan
Date Published

வாஷிங்டன் :பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின் போது பாரிஸில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உடன் அந்த மாநாட்டை தலைமை தாங்கி உரையாற்றினார். அதன் பிறகு பிரான்ஸ் அதிபருடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை (இந்திய நேரப்படி) அமெரிக்கா வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடும் குளிர் பனிப்பொழிவையும் தாண்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு வாஷிங்டன் டிசியில் (வெள்ளை மாளிகை) அமெரிக்க புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி துளசி காபர்ட்-ஐ பிரதமர் மோடி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசினார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் தன்னை வரவேற்றது முதல் துளசி காபர்ட்-ஐ சந்தித்தது வரையில் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா சென்றவுடன் பிரதமர் மோடி பதிவிடுகையில், " சற்று முன் வாஷிங்டன் டிசியில் விமானம் தரையிறங்கியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பை எதிர்நோக்குகிறோம். இந்தியா - அமெரிக்கா விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குதல். இரு நாட்டு மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் நமது நாடுகள் இணைந்து உழைக்கும் " என பதிவிட்டுள்ளார்.
unknown nodeஅடுத்ததாக தன்னை வரவேற்ற அமெரிக்க வாழ் இந்தியர்கள் பற்றி பிரதமர் மோடி குறிப்பிடுகையில், குளிர் நேரத்தில் ஒரு சூடான வரவேற்பு! கடும் பனிப்பொழிவு காலநிலையையும் பொருட்படுத்தாமல், வாஷிங்டன் டிசியில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் என்னை உற்சாகத்துடன் சிறப்பாக வரவேற்றுள்ளனர். அவர்களுக்கு என் நன்றிகள்." என பதிவிட்டுள்ளார்.
unknown nodeஅடுத்ததாக அமெரிக்கா நாட்டின் புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி துளசி காபர்ட் உடனான சந்திப்பு பற்றி பிரதமர் மோடி பதிவிடுகையில், " அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கபார்ட்-ஐ வாஷிங்டன் DC இல் (வெள்ளை மாளிகை) சந்தித்தோம். அமெரிக்காவின் புலனாய்வுத்துறை உயர் பொறுப்பில் பணியமர்த்தப்பட்டதற்கு அவர்களை வாழ்த்தினேன். இந்தியா - அமெரிக்கா நட்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்தோம். இரு நாட்டு உறவில் எப்போதும் வலுவான பங்களிப்பாளராக இருந்தார்." என பதிவிட்டுள்ளார்.
unknown node