Payload Logo
தமிழ்நாடு

மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.!

Author

gowtham

Date Published

Rajendra Cholan - PM Modi

அரியலூர் :கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.  தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற்று வரும் ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி,  பெருவுடையார் கோயிலில் தரிசனம் செய்த மோடி, கோயில் வளாகத்தில் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர், தமிழகத்தின் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாமன்னர் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த நினைவு நாணயத்தை வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தில் ஒருபக்கம் ரூ.1,000 மற்றும் அசோக சின்னமும், மறுபுறம் ராஜேந்திர சோழனின் உருவப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி, ராஜேந்திர சோழனின் கடல் பயணங்கள் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கட்டுமானப் பணியின் ஆயிரமாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்தியத் தொல்லியல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், சிதம்பரம் எம்.பி., திருமாவளவன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நினைவு நாணய வெளியீடு, சோழப் பேரரசின் பொற்காலத்தை அடையாளப்படுத்திய ராஜேந்திர சோழனின் பங்களிப்புகளைப் போற்றும் வகையில் அமைந்தது, மேலும் இது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்தது.

unknown node