Payload Logo
சினிமா

"தயவு செஞ்சி என்னை தொடாதீங்க"...மிஷ்கினுக்கு முத்தம் கொடுத்த நித்யா மேனன்!

Author

bala

Date Published

mysskin nithya menon

சென்னை :ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில், நித்யாமேனன், கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவி, மிஷ்கின், அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

விழாவிற்குள் வருகை தரும்போது மிஷ்கினை பார்த்து நித்யாமேனன் இன்ப அதிர்ச்சியடைந்து அன்பாக முத்தம் கொடுத்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விழாவிற்குள் வருகை தந்தவுடன் நித்யா மேனன் மிஷ்கினை பார்த்து ஆச்சரியத்தில் கத்தினார். உடனே மிஷ்கின் நித்தியா மேனனின் கைகளை பிடித்து நலம் விசாரிக்க முயற்சி செய்தார்.

உடனடியாக நித்யா மேனன் தயவு செய்து என்னை தொடாதீங்க தொடாதீங்க என கூறினார். உடனடியாக மிஷ்கின் கன்னத்தை காண்பித்தார். பிறகு நித்யாமேனன் அவருக்கு பாசமாக முத்தம் கொடுத்தார். பின் நித்யா மேனன் கையை பிடித்து மிஷ்கினும் பதிலுக்கு அன்பாக முத்தம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், மிஷ்கினும், நித்யா மேனனும் இணைந்து சைக்கோ படத்தில் பணியாற்றியுள்ளனர். சினிமாவையும் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூட சொல்லலாம். குறிப்பாக, மிஷ்கின் இயக்கும் படங்கள் வெளியாகவில்லை என்றால் சீக்கிரம் படம் செய் என நித்யா மேனன் கூறுவதும், நித்யா மேனன் படங்கள் வெளியானால் அதனை பார்த்துவிட்டு அவருக்கு கால் செய்து மிஷ்கின் பாராட்டுவார். பல பேட்டிகளில் தரமான படங்களை இயக்கிய மிஷ்கின் நித்யா மேனன் நடிப்பு அரக்கி என புகழ்ந்து பேசியும் பார்த்துள்ளோம்.  திரைத்துறையும் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் அன்பாக முத்தம் கொடுத்து கொண்டனர்.

unknown node