கறி குழம்பு சுவையில் பட்டாணி குருமா செய்யலாமா ?
Author
k palaniammal
Date Published

பட்டாணி குருமா -பயிறு வகைகளில் பட்டாணி ஒரு தனி இடம் பிடித்துள்ளது எனலாம். பட்டாணி இரண்டு வகையில் உள்ளது. ஒன்று பச்சை பட்டாணி மற்றொன்று பச்சை பட்டாணி பதப்படுத்தி கிடைக்கக் கூடிய உலர்ந்த பட்டாணி. இந்த பட்டாணி சமையலில் பல வகைகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சாலட் வகைகள் அவியல், பிரியாணி, குருமா என்று செய்து ருசித்திருப்போம் . அசைவ சுவையில் குருமா எவ்வாறு செய்வது என பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:பட்டாணியை 6 முதல் 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பச்சை பட்டாணியாக இருந்தால் அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். இந்த குருமாவை குக்கரில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். அரைக்க தேவையான பொருளான சீரகம் சோம்பு, மிளகு ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ,வர மிளகாய் ஆகியவற்றை பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற வைத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு அதிலே தேங்காய் ஒரு மூடி சேர்த்து அதிலே வறுத்து வைத்துள்ள சீரகம் சோம்பு போன்ற பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதிலே மசாலா பொடி மற்றும் பட்டாணியும் உருளைக்கிழங்கையும் சேர்க்க வேண்டும் ஐந்து நிமிடம் அதிலே வதக்கிய பிறகு நாம் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்க்கவும். இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு இறக்கவும். சுவையான காரசாரமான பட்டாணி உருளைக்கிழங்கு குருமா ரெடி. இதை நாம் சாதம் மற்றும் சப்பாத்திக்கு சைடிஷ் ஆக சேர்த்து சாப்பிடலாம்.
நிறைந்துள்ள சத்துக்கள்:பட்டாணியில் அதிக அளவு நார்ச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்துள்ளது அது மட்டுமல்லாமல் போலைட் கால்சியம் ,மெக்னீசியம், சிங் ,பொட்டாசியம் அயன் போன்ற தாது சத்துக்களையும் கொண்டுள்ளது.
பயன்கள்:
ஆகவே பட்டாணியை நாம் தினமும் வேகவைத்து அல்லது வேறு ஏதேனும் வகையிலோ சேர்த்துக்கொண்டு அதன் பலனை பெறுவோம்.