Payload Logo
இந்தியா

டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்...

Author

manikandan

Date Published

Next Delhi CM List

டெல்லி :கடந்த 2013 (48 நாட்கள்), 2015, 2020 முதல் 2025 வரை டெல்லி மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி 2025 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த பிப்ரவரி 8ஆம் தேதியே தேர்தல் முடிவுகள் வெளியானாலும் இன்னும் முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பை பாஜக தலைமை வெளியிடவில்லை.

அதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பலரது பெயர்கள் முதலமைச்சர் லிஸ்டில் முன்னிலையில் உள்ளன. 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லி மாநிலத்தில் 48 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டும் வென்றிருந்தது.

முதலமைச்சர் ரேஸ் :

டெல்லியின் புதிய முதலமைச்சர் யார் என்ற ரேஸில் முதலிடத்தில் இருப்பவர் பர்வேஷ் வர்மா. இவர் தான் புது டெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர். முன்னாள் எம்பி, மூத்த பாஜக நிர்வாகி என்று இருப்பதால் இவரது பெயர் முன்னிலையில் உள்ளது.

விஜேந்தர் குப்தா, இவர்  ரோகினி தொகுதியில் 2015, 2020, 2025 என கடந்த 3 சட்டமன்ற தொகுதியிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளதால் இவரது பெயர் லிஸ்டில் உள்ளது.  அடுத்து மாளவியா நகர் தொகுதியில் வெற்றி பெற்ற சதீஷ் உபாத்யாய் பெயர் உள்ளது. மோதி நகர் தொகுதியில் வென்ற ஹரிஷ் குரானா பெயர் உள்ளது. இவர் டெல்லி முன்னாள் முதல்வர் மதன் லால் குரானாவின் மகன் ஆவார்.

இந்த லிஸ்டில் டெல்லி எம்எல்ஏ அல்லாத டெல்லி பாஜக மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா பெயரும் உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி மாநில தலைமை ஏற்ற பிறகு சந்தித்த முதல் தேர்தலிலேயே 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜகவை அரியணை எற வைத்ததால் இவரது பெயரும் லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது.