Payload Logo
இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் : இன்று கூடுகிறது நாடாளுமன்ற கூட்டுக்குழு!

Author

bala

Date Published

one nation one election

டெல்லி :கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.  "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற திட்டம், தேர்தலுக்கான உழைப்பு மற்றும் செலவினங்களை குறைக்க உதவும் என ஆதரவாளர்கள் ஒரு பக்கம் தெரிவிக்கின்றார்கள். மற்றோரு பக்கம் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த திட்டம் செயல்படுத்தபட்டால்  இடைத்தேர்தல்களின் அவசியம் குறைவடையும், இதனை செயல்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று என இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தார்கள்.

இந்த திட்டத்திற்கான மசோதா கடந்த மாதம் 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட போதே எதிர்ப்பு அதிகமாக வந்த நிலையில், இதற்கு தனியாக 39 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கூட்டுக்குழுவை அமைத்து, மசோதாவை நுணுக்கமாக ஆராய முடிவு செய்யப்பட்டது. அது மட்டுமின்றி அந்த கூட்டுக்குழுவில் இந்த திட்ட மசோதாவின் விதிகள் குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று நடக்கிறது. 39 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவராக பாஜக எம்பி பிபி சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தில்,  சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் அதிகாரிகள், "ஒரே நாடு, ஒரே தேர்தல்" மசோதாவை முன்னிட்டு அதன் விதிகள் மற்றும் நடைமுறை அம்சங்களை குழு உறுப்பினர்களுக்கு விளக்கி தர உள்ளனர்.