Payload Logo
லைஃப்ஸ்டைல்

அட நெல்லிக்காயில் துவையல் செய்யலாமா..? அது எப்படிங்க..?

Author

k palaniammal

Date Published

Nellikaay

நாம் தினமும் தோசை, இட்லி, பூரி போன்ற உணவுகளுக்கு துவையல் செய்வது வழக்கம். அந்த வகையில், நாம் தினமும் ஒரே வகையான துவையலை செய்வதற்கு பதிலாக, வித்தியாசமான முறையில் துவையல் செய்து பார்க்கலாம். தற்போது இந்த பதிவில், நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

நெல்லிக்காயின் பயன்கள்

நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் குரோமியம் சத்துக்கள் உள்ளது. தினமும் நாம் நெல்லிக்காயை உணவில் சேர்த்து கொண்டால் இரத்ததில் உள்ள நச்சுகளை வெளியேற்றி தூய்மையாக வைத்து கொள்கிறது. இரத்ததில் சர்கரை அளவை குறைக்க உதவுகிறது. இரத்ததில் சர்கரை அளவை குறைக்க உதவுகிறது. மேலும் சருமம் இளமையாக இருக்கவும் இள நரையை சரி செய்ய உதவுகிறது.

தேவையான பொருட்கள்

செய்முறை

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ள  வேண்டும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பின்பு சிறிதளவு எண்ணெய், கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து அரைத்த துவையலை அதில் சேர்த்து இறக்கவும்.

இரத்ததில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் உட்கொண்டால் மேலும் அதை குறைக்கும் என்பதால் இதனை தவிர்ப்பது நல்லது.  உடல் எடை குறைவாக இருப்பவர்கள் இதனை தடுப்பது நல்லது.