Payload Logo
தமிழ்நாடு

பிரதமர் மோடியைச் சந்திக்க இபிஎஸ் திட்டம்.! அனுமதி மறுக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றம்.!

Author

gowtham

Date Published

ops -eps - pm

தூத்துக்குடி :2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து தனி விமானம் மூலம் இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். அங்கு விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மோடி திறந்து வைக்கிறார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் இன்று  (ஜூலை 26) பிரதமரை வரவேற்போரின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஓபிஎஸ் பிரதமரைச் சந்திக்க நேரம் கோரி கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அதேநேரம் இபிஎஸ்-க்கு மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பாஜக சார்பாக எல்.முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் உள்ளன. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இது பாஜக-அதிமுக உறவில் ஓபிஎஸ்-இன் செல்வாக்கு குறைந்திருப்பதாகவும் பேசப்படுகிறது. மோடியைச் சந்திக்க இபிஎஸ்-க்கு அனுமதி கிடைத்திருப்பது, அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைகளை மீண்டும் பலப்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், ஓபிஎஸ்-இன் அனுமதி மறுப்பு, அவரது அரசியல் நிலைப்பாட்டையும், கட்சிக்கு வெளியேயும் உள்ளேயும் உள்ள செல்வாக்கையும் மேலும் பலவீனப்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.