Payload Logo
லைஃப்ஸ்டைல்

இனிமேல் சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்.. இந்த பூண்டு பொடியே போதும்..!

Author

k palaniammal

Date Published

garlic powder (1) (1)

சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

garlic (3) (1)

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில்  கட்டி பெருங்காயத்தை லேசாக பொறித்து  எடுத்து வைத்துக் கொள்ளவும், பிறகு அதில் வரமிளகாயை சேர்த்து வறுத்தெடுக்கவும். பிறகு கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பை வறுத்தெடுக்கவும் .கடைசியாக பூண்டையும் வறுத்தெடுத்து இவற்றை ஆற வைத்து கொள்ளவும் .

Red chilli (1)

இப்போது வரமிளகாய், பெருங்காயம், கடலை பருப்பு ,உளுந்தம் பருப்பு இவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு கடைசியாக பூண்டையும் சேர்த்து அரைக்கவும் ..இப்போது மணக்க மணக்க பூண்டு பொடி தயாராகிவிட்டது. இவற்றை அப்படியே சாப்பிடுவதை காட்டிலும் நல்லெண்ணையில் ஊற வைத்து இரண்டு நாள் கழித்து சாப்பிடுவது கூடுதல் சுவையாக இருக்கும். இந்த பொடியை 15 நாட்கள் வரை வைத்துக் சாப்பிடலாம் .