Payload Logo
லைஃப்ஸ்டைல்

எவ்வளவு ட்ரை பண்ணினாலும் மருக்கள் மறையவில்லையா ?இதோ சூப்பரான டிப்ஸ் ரெடி ..!

Author

k palaniammal

Date Published

warts

சருமத்தில் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று  மருக்கள். இந்த மருக்கள் தற்போது அனைத்து  வயதினருக்கும் காணப்படுகிறது. சிலர் இதன் தொந்தரவால் மருத்துவமனைகளுக்கு கூட செல்வார்கள் ஆனால் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்த எவ்வாறு குணப்படுத்தலாம் மற்றும் இந்த மருக்கள் ஏன் வருகிறது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

காரணங்கள்:இது ஒரு வைரஸ் கிருமி தொற்றால் ஏற்படுகிறது. குறிப்பாக HPV  வைரஸ்  (ஹியூமன் பாபிலோனா வைரஸ் )இதுதான் மருக்கள் ஏற்பட காரணம் ஆகிறது. முகம், கை, கால், தோல் மடங்கும் பகுதிகள் மட்டும் அல்லாமல் பிறப்புறுப்புகளில் கூட ஏற்படும்.

அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் மருக்கள் வரும்.

மருக்கள் பரவுமா?பரவதா?

இந்த மருக்கள்  தொடுதல் மூலமாக மற்றவர்களுக்கு பரவும் ஆனால் இது அனைவருக்குமே வரும் என்று கூற முடியாது நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு எளிதில் வருவதில்லை. மேலும்  அவர்கள் பயன்படுத்திய சோப்பு, துணிகள் போன்றவற்ற பயன்படுத்தும் போதும் மற்றவர்களுக்கு பரவுகிறது.

மருக்கள் மீது செய்யக்கூடாதவைகள்:பலரும் மருக்கள் விரைவில் மறைய செய்ய பல வழிகளையும் செய்வார்கள் ,அதில் குறிப்பாக ஊதுபத்தி வைப்பது, முடிகளை வைத்து மருக்கள் மீது கட்டி அதை விழ  செய்வது போன்றவற்றை செய்வது கடினமான முறைகளாகும். இதனால் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது ஆகவே இவற்றைத் தவிர்த்து எளிமையான முறைகளை கையாலலாம்.

வீட்டிலேயே குணப்படுத்தும் முறை:

சிறிய சிறிய மருக்கள்  இருந்தால் இந்த முறைகளைக் கொண்டு சரி செய்து  வீட்டிலேயே சரி செய்து கொள்ளலாம் பெரிதாக இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.