ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ரமேஷ் – புதிய வீடியோ.!
Author
Rohini
Date Published
அகமதாபாத் : கடந்த வாரத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் 12 ஆம் தேதி, ஏர் இந்தியா விமானம் மதியம் 1:30 மணிக்குப் பிறகு அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, லண்டன் சர்வதேச விமான நிலையமான கேட்விக் நோக்கிச் செல்ல விருந்தது.
இருப்பினும், புறப்பட்ட சில நிமிடங்களில், அது அருகிலுள்ள பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனையின் விடுதிக் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு நபர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தற்பொழுது, சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோவில், உயிர் பிழைத்த விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்பவர், விபத்து நடந்த இடத்திலிருந்து நடந்து செல்வதைக் காட்டுகிறது. அவர் பின்னணியில் புகை எழும்ப, அருகில் இருந்த சிலர் கூச்சலிடுவதைக் காணலாம்.