மீண்டும் 'மெகா' ஹிட் கூட்டணி! வெற்றிமாறன் - தனுஷின் புதுப்பட அப்டேட்! வாடிவாசல் நிலைமை?
Author
manikandan
Date Published

சென்னை :தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக எடுத்து வெற்றிகளை குவித்து வரும் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் அண்மையில் விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளியானது.
இப்படம் வெளியாகி இன்றோடு 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதன் வெற்றி அறிவிப்போடு 2 புதுப்பட அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது விடுதலை தயாரிப்பு நிறுவனமான RS என்டெர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம். அதில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஒரு படம் என்பது ரசிகர்களுக்கு சூப்பர் சர்பிரைசாக அமைந்துள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டணியில் இதுவரை வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை , அசுரன், விசாரணை (தனுஷ் தயாரிப்பு) அனைத்து படங்களும் பெரிய வெற்றியையும், தேசிய விருதுகளையும் அள்ளியது. இதானால் அடுத்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதியப்படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் அவளோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் இதுவரை 7 திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், 8வது படமாக சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படம் தயாராக உள்ளது. இதனை அடுத்து 9வது திரைப்படமாக தனுஷ் நடிக்கும் படம் தயாராகும் என கூறப்படுகிறது.
RS பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் சூரி நாயகனாக நடிக்க, வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி என்பவர் இயக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown node