பிரதீப் ரங்கநாதனின் 'ட்ராகன்' நெருப்பை கக்கியதா? இல்ல வெறுப்பை கக்கியதா? நெட்டிசன்கள் சொல்வெதென்ன...
Author
gowtham
Date Published

சென்னை :நடிகர் பிரதீப் ரங்கநாதனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ' டிராகன் ' திரைப்படம் இறுதியாக இன்றைய தினம் திரையரங்கில் வெளியாகி, அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. அஷ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாது லோகர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் ஈர்க்கக்கூடிய கதைக்களம், குறிப்பாக பிரதீப் மற்றும் வி.ஜே. சித்துவின் பாராட்டத்தக்க நடிப்புகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பார்வையாளர்கள் படத்தின் கதைக்களத்தைப் பாராட்டியுள்ளனர்.
காலேஜில் அமர்க்களம் செய்து வரும் ஹீரோ, திடீரென வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டுவேன் என சபதம் எடுக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே இந்த 'டிராகன்' படத்தின் மீதி கதை. காமெடி, எமோஷன் என இரண்டையும் சரியாக கையாண்டு இருக்கிறார். தற்பொழுது இந்த படம் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடயை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதனை பற்றி பார்ப்போம்…
படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் "இப்போ புரியுதா யா இயக்குநர் இவ்வளவு கான்ஃபிடன்ட் ஆ இருந்தா னு. ப்ரோ நீ கான்ஃபிடன்ட் ஆ இரு ப்ரோ.. தப்பு இல்ல எல்லா இடங்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள். படம் கண்டிப்பா பிளாக்பஸ்டர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeபடம் பார்த்த மற்றொருவர்,' ஒரு பக்கா கவர்ச்சிகரமான வணிக பொழுதுபோக்கு. பிரதீப்பின் அற்புதமான நடிப்பு. ஜார்ஜ் மரியன் & மிஷ்கின் கதாபாத்திர எழுத்து அற்புதம். கதாநாயகிகள் அனுபமா மற்றும் கயாடு, லியோன் ஜேம்ஸ் இசை சூப்பர், இரண்டு பாதிகளிலும் நகைச்சுவை நன்றாக வேலை செய்கிறது. உச்சக்கட்டம் அஸ்வத், நீங்கள் இன்னொரு பிளாக்பஸ்டரை வழங்கியுள்ளீர்கள்எ" ன்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeபடம் பார்த்த மற்றொருவர்,' ட்ராகனை இயக்குநர் அழகாக எடுத்து சென்றுள்ளார். நல்ல நல்ல நல்ல சினிமா. எல்லாம் கிளாஸாக உள்ளது. இறுதியில் எமோஷனல் நன்றாக முடிந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeபடம் பார்த்த மற்றொருவர்,' முதல் பாதியின் கடைசி 40 நிமிடங்கள் நன்றாக இருக்கிறது, இடைவேளை பகுதிகள் நன்றாக உள்ளன. பாடல்கள் நன்றாக உள்ளன, காட்சிப்படுத்தலும் சரி. பிரதீப் ரங்கநாதன் நடிப்பு நன்றாக உள்ளது. பல காட்சிகள் சிரிப்பு தான். ரவீந்தர் பகுதி படத்தின் திருப்புமுனை. மைஸ்கின் பகுதி செம்ம " என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeபடம் பார்த்த மற்றொருவர்,' டிராகன் இடைவெளி தொகுதி, திரைப்படம் ஈர்க்கக்கூடிய தருணங்களால் நிரம்பியுள்ளது. மந்தமான இடைநிறுத்தங்கள் இல்லாமல் படத்தின் கதை நகர்ந்து செல்கிறது. இயக்குநரின் திரைக்கதை பொழுதுபோக்கு பிரதீப்பின் காலேஜ் ஆஃபீஸ் போர்ஷன் உண்மையில் சூப்பர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node