Payload Logo
தமிழ்நாடு

சிறுமி வன்கொடுமை - வடமாநில இளைஞரிடம் விடிய விடிய விசாரணை.!

Author

gowtham

Date Published

Thiruvallur - Arrest

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு செல்லும் வழியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை 20-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து, தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லைகளில் தேடுதல் வேட்டை நடத்தியது.

குற்றவாளியைப் பிடிக்க 5 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வடமாநில இளைஞர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்து, அவர் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகள் மற்றும் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் கஞ்சா போதைக்கு அடிமையாகி, சூலூர்பேட்டையில் உள்ள தாபாவில் பணியாற்றி வந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைதான வடமாநில இளைஞரிடம் கவரைப்பேட்டை காவல் துறையினர் 12 மணிநேரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஐஜி அஸ்ரா கார்க், டிஐஜி தேவராணி, திருவள்ளூர் எஸ்பி விவேகானந்தா சுக்லா ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நேரில் விசாரணை நடத்தியுள்ள நிலையில், அந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.