Payload Logo
தமிழ்நாடு

"எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை" - அமைச்சர் ரகுபதி!

Author

gowtham

Date Published

ragupathy

சென்னை :தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. திமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 52% ஆக உயர்ந்துள்ளது.

இதை பார்த்து அதிமுக கலகலத்து போயுள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்த அவர், பாஜக, அதிமுக சேர்ந்து வந்தாலும் திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார். தற்போது தேர்தல் வந்தால் திமுக தலைமையிலான கூட்டணி, 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெல்லும்.

தமிழகம் முழுவதும் திமுகவுக்கு ஆதரவு அலை வீசுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்முறையாக அதிமுகவினர் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை. செங்கோட்டையன் அதிருப்தியில் உள்ளார், அவரது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். திமுக வாக்கு சதவீதத்தை மேலும் உயர்த்த உழைப்போம். தமிழக மக்கள், திமுகவுக்கு எதிரான மனநிலையில் இல்லை என்பது கருத்து கணிப்புகள் மூலம் தெரிய வருகிறது.

தமிழ்நாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே மீண்டும் ஆள்வார், தமிழகம் முழுவதும் திமுகவுக்கு ஆதரவு அலை வீசுகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. பாஜக, அதிமுக சேர்ந்து வந்தாலும் திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது, மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும்" என்று கூறியிருக்கிறார்.