Payload Logo
உலகம்

சவுதி அரேபியாவை திருப்பி போட்ட பேய் மழை.. வெள்ளத்தில் மிதக்கும் மெக்கா.!

Author

gowtham

Date Published

Cars flash floods

மெக்கா:இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. அங்கு நேற்று ஒரே நாளில் பெய்த 49.2 மி.மீ  மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

விமான நிலையம், ஹாஸ்பிட்டல்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அதிலும், பைக்கோடு வெள்ளத்தில் சிக்கிய டெலிவரி மேன் ஒருவர் மீட்கப்பட்ட பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு அங்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது. இந்த நிலையில், கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் போன்ற சூழல் உருவாகி முக்கிய சாலைகள் தடைபட்டுள்ளது. கார்கள் முழுவதுமாக வெள்ள நீரில் மூழ்கியது மற்றும் பலர் அடித்துச் செல்லப்பட்டதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node