Payload Logo
தமிழ்நாடு

'சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது' - மு.க.ஸ்டாலின்.!

Author

gowtham

Date Published

mk stalin keeladi

சென்னை :கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் Face Lab இயக்குனர் பேராசிரியர் கரோலின் வில்கின்சன் தலைமையில், கீழடி அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகளைப் பயன்படுத்தி, கணினி உதவியுடன் முகத் தசைகளை மீட்டமைத்து, உடற்கூறியல் மற்றும் மானுடவியல் அளவீடுகளைப் பின்பற்றி இந்த முகங்கள் உருவாக்கப்பட்டன.

கொந்தகையில் 800 மீட்டர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இந்த மண்டை ஓடுகளை ஆய்வு செய்து, தமிழர்களின் நாகரிகத்தின் தொன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த முகங்கள் மீட்டமைக்கப்பட்டன. இதற்கு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்” எனப் பாராட்டியுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், ''சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்று கீழடி. சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறை இப்போது கீழடியில் உள்ள கண்டுபிடிப்புகள் மூலம் அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

இதனிடையே, கீழடி அகழாய்வு தமிழர்களின் நகர நாகரிகம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் இருந்ததை உறுதிப்படுத்துவதாகவும், இதற்கு மத்திய அரசு அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.