Payload Logo
தமிழ்நாடு

Live : 2025-ன் முதல் ஜல்லிக்கட்டு முதல்... பல்வேறு அரசியல் நிகழ்வுகள் வரை...

Author

manikandan

Date Published

Today Live 03012024

சென்னை :புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாஜகவை விமர்சனம் செய்ததை தொடர்ந்து, கூட்டணியில் உள்ள திமுக அரசையும் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதாக கூறி கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு திமுக அரசு சார்பிலும் பதில் அளிக்கப்பட்டது.