Payload Logo
தமிழ்நாடு

LIVE : மும்மொழி விவகாரம் முதல்...மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!

Author

bala

Date Published

LIVE NEWS FEB 27

சென்னை :மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர் வழியிலான திராவிட இயக்கம், ஆதிக்க மொழியின் படையெடுப்பை முறியடித்து தமிழைப் பாதுகாக்கும் அரண் எனவும், இந்தி திணிப்பால் தமிழ் அழியாது ஆனால் தமிழர் பண்பாடு அழியும் என்பதால் தான் நாங்கள் எதிர்க்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 26) மகா சிவராத்திரி 2025, உலகம் முழுவதும் சிவபக்தர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்நாளில், பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் விழித்திருந்து, சிவபெருமானை வழிபட்டனர். ஈஷாவில் நடந்த விழாவில்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒடிசா மாநில ஆளுநர் ஹரிபாபு கம்பஹம்பதி, பஞ்சாப் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர்.