Payload Logo
தமிழ்நாடு

Live : சீமான் விவகாரம் முதல்... மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!

Author

gowtham

Date Published

live news tamil

சென்னை :நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் இன்றும் வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளனர்.

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து திட்டமிட்டபடி இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.