தமிழ்நாடு
Live : சட்டபேரைவை கூட்டத்தொடர் முதல்..திருப்பதி கூட்ட நெரிசல் வரை!
Author
bala
Date Published

சென்னை :இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. நேற்று சென்னை அண்ணாபல்கலைகழக விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு காரசாரமான விவாதம் நடைபெற்றது. இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று விவாதம் தொடர்ச்சியாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.