தமிழ்நாடு
Live : கோவை சமையல் எரிவாயு லாரி விபத்து முதல்... அமலாக்கத்துறை சோதனை வரை...
Author
manikandan
Date Published

சென்னை :கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை அவினாசி பாலத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டேங்கரில் இருந்து சமையல் எரிவாயு கசிந்துள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வேலூர் காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மகன் திமுக எம்பி கதிர் ஆனந்த் மற்றும் திமுக நிர்வாகி ஒருவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.