தமிழ்நாடு
Live : செம்மொழி பூங்கா மலர் கண்காட்சி முதல்... அமெரிக்காவில் சைபர் டிரக் வெடித்தது வரை...
Author
manikandan
Date Published

சென்னை :சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் 30 லட்சம் மலர்கள் கொண்டு மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இன்று முதல் ஜனவரி 18ஆம் தேதி வரையில் இந்த மலர் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்காவில் நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸில் டொனால்ட் டிரம்ப் ஹோட்டல் முன்பு டெஸ்லாவின் சைபர் டிரக் வெடித்து சிதறியது. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.