Payload Logo
உலகம்

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

Author

castro

Date Published

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு செய்தி தொலைக்காட்சி சேனலான ”Abruptly” மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. செய்தி வாசிப்பின்போது தாக்குதல் நடந்ததால், வாசிப்பாளர் உடனடியாக அங்கிருந்து ஓடினார். இந்த காட்சி தற்போது வைரலாகிறது.

இஸ்ரேல் மீது எதிர்பாராத தாக்குதல் இன்று நடத்தப்படும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மீதான நேரடி விமர்சனத்தை ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒளிபரப்பில் நிகழ்த்திக் கொண்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு நடந்ததாக ஈரானிய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தகவலின்படி, ஈரானிய தொகுப்பாளர் சஹார் எமாமி செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ந்தும் ஸ்டுடியோவே அதிர்ந்தது. அவர் உடனடியாக செய்தியை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியே ஓட வேண்டியிருந்தது.

மேலும் ,  “அல்லாஹு அக்பர்” என்ற குரல்கள் பின்னால் இருந்து கேட்டன. இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, டெஹ்ரானின் தொலைக்காட்சி ஸ்டுடியோக்கள் அமைந்துள்ள பகுதியை காலி செய்யுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது.