Payload Logo
Untitled category

உங்கள் ஆரோக்கியம் மேம்பட உங்கள் உடல் சொல்வதையும் கேளுங்கள்..!

Author

k palaniammal

Date Published

meditation

நம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையே நம் உடல் சொல்வதை கேட்பதுதான் நம் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறை இருந்தால் அதை நமது உடலிடம் எவ்வாறு பேச வேண்டும் என்பது பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

உடல் பேசும் மொழிஆரோக்கியமாக இருக்க உணவு முறை மட்டுமே காரணமாக இருக்க முடியும் என்று கூற முடியாது நம் உடலும் மனமும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் குறிப்பாக நம் உடல் .நம் உடலுக்கும் புரிந்து கொள்ளும் தன்மை உள்ளது   என பல ஆராய்ச்சிகளிலும் கூறுகின்றனர்.

உணவைப் உண்பதற்கு என்று பல முறைகள் உள்ளது ,  சிறிது நாட்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள் அதைப் பிரித்து ஒரு நாளைக்கு ஐந்து முறை கூட எடுத்துக் கொள்ளலாம் என கூறினார்கள். பிறகு அதிகமாக சாப்பிட்டுக் கொண்டே இருந்தோமே ஆனால் இன்சுலின் அதிகமாகும் ரத்த அழுத்தம் ஏற்படும் என கூறினார்கள். இப்படி உணவு எடுத்துக்கொள்வதில் பல முறைகள் வந்துவிட்டது, இருந்தாலும் நம் உடல் என்றாவது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருளை சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றும் இந்த உணர்வு தான் உடலின் மொழி அதை நாம் புரிந்து கொண்டு அந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் மற்றவர்களை விட நமக்கு  என்ன தேவை என்று நம் உடலே  கூறு விடும் அதை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். உடல் ஓய்வு கேட்கும் போது அதற்கு அரை மணி நேரம் ஓய்வு கொடுத்தாலே அது தன்னை புத்துணர்வு படுத்திக் கொள்ளும்.

உடலின் உணர்வு திறன்நம் உடலின் உறுப்புகள் எவ்வாறு இயங்குகிறது என்பது இன்றும் கேள்விக்குறியாக தான் இருக்கிறது. நம் உடலுக்கும் புரிந்து கொள்ளும் சக்தி உண்டு,  நாம் ஒரு உணவை எடுத்துக் கொள்கிறோம் என்றால் அதற்குத் தேவையான சுரப்பிகள் சுரக்கிறது இதனை யாரும் உடலிடம் தெரிவிப்பதில்லை நம் கண்கள் பார்க்கிறது, நாசிகள் வாசத்தை உணருகிறது, பிறகு நாக்கு சுவையை உணருகிறது இப்படி நம் ஐம்புலன்களும் உணர்வது மூளைக்குச் சென்று அந்த உணவு ஜீரணமாக தேவையான சுரப்பிகள் சுரக்கிறது.

நோயை தீர்க்கும் உடல்உங்கள் உடலில் எந்த உறுப்புகளில் பிரச்சனை உள்ளதோ அதனிடம் பேசுங்கள். உதாரணமாக பெண்களுக்கு அதிகமாக பிரச்சனை ஏற்படுவது கர்ப்பப்பையில் தான், அந்த கருப்பையிடம் "   நீ சரியான படி இயங்கு என கட்டளை இடுங்கள்  அல்லது இயங்கி கொண்டிருக்கிறாய் என   நேர்மறையான சொற்களை அந்த உறுப்பிடம் கூற வேண்டும் இவ்வாறு தொடர்ந்து சொல்லும்போது   போது அதை தட்டி எழுப்புவது போல் செயல்பட ஆரம்பிக்கும், இதை தியான முறையில் செய்தால் விரைவில் குணமாகலாம்.

ஆகவே மருந்து மாத்திரைகள்  ஒரு பக்கம் எடுத்துக் கொண்டாலும் நம் உடல் சொல்வதைக் கேட்டும் அதனிடம் நாம் கட்டளையிட்டும் நோயை குணப்படுத்திக் கொள்ளலாம்.