Payload Logo
ஆன்மீகம்

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

Author

Bala

Date Published

சென்னை : சென்னை – டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு 7.10க்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானமும், சென்னையில் இருந்து இரவு 8.40மணிக்கு செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது.

பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு நிர்வாக காரணங்கள் முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், மாற்று விமானங்களைத் தேர்வு செய்யாத பயணிகளுக்கு முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்பட்டது அல்லது இலவசமாக மறு முன்பதிவு வசதி வழங்கப்பட்டது. சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 6 மணி நேரம் தாமதமாகியது. மேலும், சிங்கப்பூர் செல்வதற்காக வந்திருந்த 252 பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

குறிப்பாக, கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து (AI-171) ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்திய விமானப் போக்குவரத்து ஆணையமான DGCA, போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஆய்வுகளை அறிவித்தது. இதன் காரணமாக கடந்த இரு தினங்களாக விமானங்களின் இயக்கத்தில் தாமதத்தையும் ரத்துகளையும் ஏற்படுத்தியுள்ளது.