Payload Logo
இந்தியா

குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு "கேல் ரத்னா" விருதுகள் அறிவிப்பு.!

Author

gowtham

Date Published

KhelRatna Award

டெல்லி:2024ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதான கேல் ரத்னா, உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், ஹர்மன்பிரீத் சிங்(ஹாக்கி), மனுபாக்கர் (துப்பாக்கிச் சுடுதல்) பிரவீன் குமார் (பாரா தடகள வீரர்) ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வரும் 17ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் வைத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதுகளை வழங்க உள்ளார். முன்னதாக, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டபோது, ​​மனுபாகரின் பெயர் அதில் இடம்பெறவில்லை.

இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் மனு பாக்கரின் தந்தையும் இது குறித்து ஏமாற்றம் தெரிவித்திருந்தார். இதையடுத்து மனு பாக்கருக்கு இப்பொது கேல் ரத்னா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குகேஷ்

செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் சீனாவின் லின் டானை தோற்கடித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் காரணமாக அவருக்கு மிக உயர்ந்த விளையாட்டு கவுரவம் கிடைத்தது. இதன் மூலம் குகேஷ் இந்தியாவில் இருந்து இளம் உலக சாம்பியன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஹர்மன்பிரீத் சிங்

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. இது இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் தொடர்ந்து இரண்டாவது வெண்கலப் பதக்கமாகும்.

பிரவீன் குமார்

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 இல், உயரம் தாண்டுதல் T64 பிரிவில் பிரவீன் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றார். இது தவிர, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பிரவீன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மனுபாக்கர்

ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 2 இந்தியாவுக்காக வெண்கலப்பதக்கம் வென்றார்.