Payload Logo
தமிழ்நாடு

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு - மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

Author

gowtham

Date Published

CM Stalin -Kerala

கேரளா :சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து அவர்களை விடுவிக்கக் கோரியுள்ளது. கன்னியாஸ்திரிகள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று திருச்சபை தெரிவித்துள்ளது.

திருச்சபையுடன் சேர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ''சத்தீஸ்கரில் பஜ்ரங் தளம் அமைப்பினரால் கேரள கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இருவர் துன்புறுத்தலுக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியுள்ளது ஆழ்ந்த கவலையளிக்கிறது.

இந்தியாவின் சிறுபான்மையினர் கண்ணியத்திற்கும் சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள், அச்சத்திற்கு அல்ல'' என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

காங்கிரஸ் கட்சியும் இந்த சம்பவத்தை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார்.