Payload Logo
இந்தியா

"அரசு பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு" கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்!

Author

gowtham

Date Published

Karnataka Government Bus

கர்நாடகா:கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து கழகங்களிலும் (எஸ்ஆர்டிசி) பேருந்து கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம் (பிஎம்டிசி) உள்ளிட்ட அனைத்து எஸ்ஆர்டிசிக்களுக்கும் ஜனவரி 5 முதல் உயர்த்தப்பட்ட கட்டணம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன் மூலம் பணமில்லா நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.7.84 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அரசுக்குச் சொந்தமான பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கும் சக்தி திட்டம் பாதிக்கப்படாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC), வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் (NWKRTC), கல்யாண கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் (KKRTC) மற்றும் BMTC ஆகிய நான்கு மாநில போக்குவரத்து கழகங்களை கர்நாடகம் நடத்துகிறது.

இந்த நான்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் பேருந்துக் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தியுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் ஜேடி(எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.