Payload Logo
லைஃப்ஸ்டைல்

உங்கள் பின்புறத்திலுள்ள கொழுப்பை குறைக்க இந்த 3 எளிய உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..!

Author

rebekal

Date Published

cobra pose

ஆண்கள் பெண்கள் எல்லாருக்குமே தற்பொழுது மிகப்பெரும் சவாலாக இருப்பது உடல் பருமன் பிரச்சனை தான். அதிலும், சிலருக்கு வயிற்றில், சிலருக்கு பின் புறத்தில் பலருக்கு கால்களில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருக்கும். இதனால் நாம் அழகை இழந்து விடுமோ எனும் அச்சத்தில் பலரும் செயற்கையான பல மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்.

ஆனால், இவை உடல் எடையை குறைத்து விட போவதில்லை. எதிலும் ஒரு முறையான பயிற்சி இருக்க வேண்டும். குறிப்பாக பின்புறத்தில் உள்ள சதையை குறைக்க பெண்கள் அதிகம் விரும்புவார்கள். இதனால் விரும்பிய ஆடைகளை அணிய முடியாமல் போய் விடும். எனவே பின்புறத்திலுள்ள கொழுப்பை குறைப்பதற்கான எளிய மூன்று உடற்பயிற்சிகளை பற்றி இன்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பாட் ரன்னிங்

பெண்கள் கொழுப்பை குறைப்பதற்கு சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்று ஸ்பாட் ரன்னிங். இதை செய்வதன் மூலம் அதிக அளவில் கொழுப்பை குறைக்க முடியும். முதலில் ஒரே இடத்தில் நின்று நேராக நடக்க வேண்டும், அதன் பின்னதாக சற்று வேகமாக நின்ற இடத்தில் நடக்க தொடங்க வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது கால்விரல்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் . தினமும் 30 முதல் 40 வினாடிகள் இவ்வாறு செய்து வரும் பொழுது, நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். இதன் மூலம் நமது இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல், முதுகு முதல் தொடை வரையுள்ள கொழுப்புகள் குறையும்.

எல்போ பிளாங்

கொழுப்பை குறைப்பதில் எல்போ பிளாங் உடற்பயிற்சி மிகச்சிறந்த ஒரு முறையாகும். இந்த உடற்பயிற்சி செய்வது மிகவும் எளிது. முதலில் தரையில் வயிறு படுமாறு படுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பதாக கை மற்றும் கால்கள் உடல் எடையை தங்குமாறு சமநிலைப்படுத்தி வைத்துக்கொள்ளவும். இவ்வாறு உடலை நேராக சில வினாடிகள் வைத்திருக்க வேண்டும். அதன் பின் உள்ளேயும், வெளியேயும் மூச்சை இழுத்து விட வேண்டும். இவ்வாறு தினமும் சிறிது நேரம் செய்து வரும் பொழுது நமது முதுகு புறம் உள்ள கொழுப்பு குறைந்து விரும்பிய உடல் அழகு பெற முடியும்.

கோப்ரா போஸ்

கொழுப்பை குறைப்பதற்கான சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்று கோப்ரா போஸ். இது அதிக அளவில் கொழுப்பை குறைப்பதற்கு உதவுகிறது. இந்த கோப்ரா போஸ் செய்யும் பொழுது, தரையில் வயிறு படுமாறு படுத்துக் கொள்ள வேண்டும். பின்பு உள்ளங்கைகளை நேராக நிமிர்த்தி வைத்துக் கொள்ளவேண்டும். அதன்பின் மெல்லமாக நமது இடுப்பை நேராக்க வேண்டும். அது போல தலை மற்றும் கழுத்தையும் நேராக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு சிறிது நேரம் இருக்க வேண்டும். இந்த பயிற்சியை தினமும் 3 முதல் 5 முறை செய்யலாம். இவ்வாறு தினமும் செய்து வருவதன் மூலமாக முதுகு பகுதியில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பு முற்றிலுமாக குறைய உதவுகிறது.