Payload Logo
திரைப்பிரபலங்கள்

"அஜித் சாருடன் இணைவது விரைவில் நடக்கும்"..லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

Author

bala

Date Published

lokesh kanagaraj ajith

சென்னை :லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித் ரசிகர்களுக்கு ஒரு சந்தோசம் வந்துவிடும் என்று சொல்லலாம். ஏனென்றால், அஜித் ரசிகர்கள் பெரும்பாலும் அஜித்தை ஒரு ஆக்சன் படத்தில் பார்க்க தான் விருப்பப்படுவது உண்டு. எனவே, லோகேஷ் கனகராஜும் முழுக்க முழுக்க அதிரடியான ஆக்சன் படங்களை தான் இயக்கியும் வருகிறார்.

எனவே, அவருடைய இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தார் என்றால் அந்த படம் எப்படி இருக்கும் என்பதை பற்றி சொல்லியா தெரியவேண்டும். இருப்பினும், பல ரசிகர்களுடைய ஆசையாக அது இருந்தாலும் அது தாமதமாக நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், லோகேஷ் கனகராஜும், அஜித்தும் தற்போது தாங்கள் கமிட் ஆகியுள்ள படங்களில் பிசியாக இருக்கிறார்கள்.

வரும் காலத்தில் இவர்கள் இருவரும் இணைந்து படம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த சூழலில் இருவரும் இணைவதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு சின்ன குறியீட்டை லோகேஷ் கனகராஜ் கொடுத்திருக்கிறார்.  சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தொகுப்பாளர் அஜித்துடன் எப்போது பணியாற்றுவீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் " எனக்கும் அஜித் சாரை வைத்து படம் இயக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. விரைவில் அது நடந்துவிடும் என நான் நினைக்கிறேன்" என தெரிவித்தார். இவர் பேசிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், விரைவில் அஜித்தை வைத்து படம் எடுங்கள்  என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும், அஜித் நடித்துமுடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.