புற்றுநோயில் இருந்து மீண்ட ஜெயிலர் பட பிரபலம்... மனைவியோடு உருக்கமாக பதிவு!
Author
gowtham
Date Published

சென்னை:பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து ஓய்வில் இருக்கும் சிவராஜ்குமார், தற்போது முழுவதும் குணமாகி விட்டதாக அவரின் மனைவி கீதா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இவர், ஜெய்லர் படத்தில் ரஜினியின் நண்பராக நடித்திருப்பார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சிவராஜ் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சமீபத்தில், அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதன்பின் அவரது மனைவி கீதா சிவராஜ்குமார், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு அவர் தனது மனைவி கீதா உடன் தனது ரசிகர்களுக்கு நற்செய்தி ஒன்றை வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய கீதா சிவராஜ் குமார், சிவராஜ் குமாரின் உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சிவராஜ் குமாரின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பேத்தாலஜி ரிப்போர்ட் வரும் வரை கொஞ்சம் கவலையாக இருந்தது இப்போது அந்த ரிப்போர்ட்டும் நெகட்டிவ், எல்லாமே ரொம்ப சந்தோஷம்" என்றார்.
பின்னர் பேசியசி சிவராஜ்குமார், "ரசிகர்கள், நண்பர்கள், சக நடிகர்கள், பால்ய நண்பர்கள் என அனைவரின் ஆதரவும் எனக்கு தைரியத்தை அளித்தது. புற்றுநோய் என்று தெரிந்தால் எல்லாரும் பயப்படுவார்கள். எனக்கும் பயமாக இருந்தது. நீங்கள் எங்கள் மீது பொழியும் அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். முதல் சில மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னார்கள். 'அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்' என சிவராஜ் குமார் கூறியுள்ளார்.
unknown node