Payload Logo
தமிழ்நாடு

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

Author

gowtham

Date Published

Supreme Court - Poovai Jagan Moorthy

சென்னை :திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகியுள்ளார்.

இந்த வழக்கு, காதல் திருமணம் செய்த இளைஞரின் 17 வயது சகோதரனை கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம், ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும், அவரது முன்ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த ஜூன் 26ம் தேதி  அன்று தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது. இந்த வழக்கில், எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளிக்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.

இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அவரது மனுவை ரத்து செய்த நிலையில், தலைமறைவாக உள்ள ஜெகன்மூர்த்தியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கில் முன்ஜாமின் வழங்கியதோடு தமிழ்நாடு அரசு, காவல்துறை விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.