விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!
Author
manikandan
Date Published

டெல்லி :விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் 2 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
ஸ்பேடெக்ஸ் ஏ (SpaDex A) மற்றும் ஸ்பேடெக்ஸ் பி (SpaDex B) ஆகிய 400 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் சுமந்து சென்றது. விண்ணில் 700 கிமீ தொலைவில் இரண்டு செயற்கைகோளையும் 20 கிமீ தொலைவில் வெவ்வேறு திசைகளில் நிலை நிறுத்தி பின்னர் அதனை இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டது.
இந்த இணைப்பு நடவடிக்கை நாளை (ஜனவரி 9) நடைபெறும் என இஸ்ரோ அறிவித்து இருந்தது. ஆனால், இந்த ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் நாளை நடைபெற இருந்த இந்த செயல்முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது, 2 செயற்கைகோள்களும் நன்றாக உள்ளது என்றும், அடுத்தகட்ட அறிவிப்புகள் உடனடியாக வெளியாகும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
unknown node