2 செயற்கைக்கோள் தூரம் குறைப்பு... கடைசியில் இஸ்ரோ எடுத்த முடிவு!
Author
gowtham
Date Published

டெல்லி:ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30ஆம் தேதி PSLV C-60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் A, ஸ்பேடெக்ஸ் B ஆகிய 2 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இப்போது, ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 விண்கலன்களுக்கு இடையேயான இடைவெளியை குறைத்தும், அதிகரித்தும் இஸ்ரோ சோதித்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 10ஆம் தேதி விண்கல்களுக்கும் இடைப்பட்ட தொலைவு 500 மீட்டராக இருந்த இடைவெளி 15 மீட்டராக குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர ஆய்வுக்கு பின்னர் இரண்டு செயற்கைக்கோள்களையும் இணைக்கும் பணி நடைபெறும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
unknown nodeஅதன்படி, Chaser மற்றும் Target விண்கலன்களின் இடைவெளி படிப்படியாக 3 மீட்டர் வரையில் குறைக்கப்பட்ட நிலையில், செயற்கைக்கோள் மீண்டும் பல்வேறு காரணங்களால் பின்னோக்கி நகர்த்தப்பட்டன. செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு பணிகள் குறித்த தரவுகளை ஆய்வு செய்த பின், இஸ்ரோ தனது டாக்கிங் முயற்சியை மீண்டும் தொடங்குமென தகவல் வெளியாகியுள்ளது.
unknown node