Payload Logo
கிரிக்கெட்

ஐபிஎல் 2025 : மும்பை இந்தியன்ஸ் அட்டவணை இதோ!

Author

bala

Date Published

Mumbai Indians

துபாய் :இந்த ஆண்டு நடைபெறவுள்ள 18-வது ஐபிஎல் சீசனுக்கான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாகியுள்ளது. அதற்கான காரணமே போட்டிகள் குறித்த அட்டவணை அறிவிக்கப்பட்டது தான். அதில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் மும்பை இந்தியன்ஸ் அட்டவணை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..

முதல் போட்டியே சென்னைஇந்த ஆண்டு மும்பை அணி தங்களுடைய முதல் போட்டியிலேயே பரம எதிரியான சென்னை அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச் 23  மாலை 7:30 மணிக்கு சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 37 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. சென்னை அணி 17 முறை வெற்றிபெற்றுள்ளது.

மும்பை அணிஹர்திக் பாண்டியா, ரோஹித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ட்ரெண்ட் போல்ட், கர்ண் ஷர்மா, ராபின் மின்ஸ், நமன் திர், ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், அல்லா கசன்ஃபர், வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், ரீஸ் டாப்லி, கிருஷ்ணன், சத்யநாரயணன், ராஜு நாராயணன், ராஜு நாராயணா வில் , அர்ஜுன் டெண்டுல்கர், விக்னேஷ் புதூர்