Payload Logo
கிரிக்கெட்

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

Author

gowtham

Date Published

Shubman Gill -ENG vs IND

மான்செஸ்டர் :இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன்103 ரன்களுக்கு அவுட்டானார். இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இன்று இந்தப் போட்டியின் கடைசி நாளாகும், தற்போது இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் நடந்து வருகிறது.

இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தியுள்ளார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம், மான்செஸ்டரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் புதிய மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

இந்தத் தொடரில் ஏற்கனவே முதல் டெஸ்டில் ஒரு சதம், இரண்டாவது டெஸ்டில் ஒரு இரட்டை சதம் மற்றும் மற்றொரு சதம் அடித்திருந்த கில், இந்த நான்காவது சதத்துடன் 47 ஆண்டுகளில் வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் 4 சதங்கள் அடித்த முதல் கேப்டனாக வரலாறு படைத்துள்ளார்.

அதாவது, ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன்கள் பட்டியலில் டான் பிராட்மேன், சுனில் கவாஸ்கரை சமன் செய்து சுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்தார். மேலும், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் (632) அடித்த ஆசிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், முன்னாள் பாக், வீரர் முகமது யூசுஃப் (631), டிராவிட் (602), கோலி (593) ரன்கள் எடுத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் இந்திய அணி தொடரை சமன் செய்ய வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, ஏனெனில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கில்லின் இந்த சதம், அவரது தலைமையிலான இந்திய அணிக்கு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.