Payload Logo
கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

Author

gowtham

Date Published

England Women vs India Women 1st T20I

நொட்டிங்காம் :ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஸ்மிருதி மந்தனா 62 பந்துகளில் சதம் அடித்து சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.

நாட்டிங்ஹாமில் நடந்த இந்த போட்டியில், டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் சதத்தின் அடிப்படையில் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, இங்கிலாந்து மகளிர் அணி 14.5 ஓவர்களில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் காயமடைந்ததால், அவருக்கு பதிலாக ஸ்மிருதி மந்தனா கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சார்பாக மந்தனாவும் ஷெஃபாலி வர்மாவும் இந்தியாவுக்கு அதிரடியான தொடக்கத்தை அளித்து முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர்.

இறுதியில், இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து அபாரமான பேட்டிங் செய்திருந்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த, இங்கிலாந்துஅணி சார்பாக, நடாலி ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் டாமி பியூமண்டின் கூட்டணி 49 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதில், நிதானமாக விளையாடிய நடாலி 66 ரன்கள் எடுத்தார். இருப்பினும், அணியின் மற்ற வீரர்கள் ரன் எடுக்க தவறியதால், கடுமையான தோல்வி ஏற்பட்டது.

அதே நேரத்தில், இந்தியா சார்பாக ஸ்ரீ சரணி நான்கு விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா மற்றும் ராதா யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இது தவிர, அமன்ஜோத் கவுர் மற்றும் அருந்ததி ரெட்டி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டாவது டி20 போட்டி பிரிஸ்டலில் ஜூலை 1 (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு இந்திய நேரப்படி நடைபெறும். மூன்றாவது டி20 போட்டி ஜூலை 4 (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு ஓவலில் நடைபெறும்.