Payload Logo
கிரிக்கெட்

“நன்றாக விளையாடினால் சுய விளம்பரம் தேவைப்படாது”- தோனியின் பளீச் பதில்

Author

manikandan

Date Published

MS Dhoni

எம்.எஸ்.தோனி :தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தாங்கள் இத்தனை சாதனை செய்துள்ளோம், தாங்கள் இந்த விருதுகளை வென்றுள்ளோம் . இந்த நட்டிற்கு சென்று விளையாடிவிட்டு வந்துள்ளோம் என்பதை வெளியுலகில் விளம்பரப்படுத்தி அதன் மூலம் தங்கள் புகழை இன்னும் மெருகேத்தி கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

ஆனால், அதில் இருந்து ஒரு சிலர் மட்டுமே விலகி, தங்கள் ஆட்டத்தின் மீதும் தங்கள் திறமை மீது மட்டுமே நம்பிக்கை வைத்து அதனை தொடர்ந்து பயற்சித்து மற்ற விளம்பரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். அதில் கிரிக்கெட் உலகில் முக்கிய நபர் மஹிந்திர சிங் தோனி.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 4 ஆண்டுகள் கடந்து விட்டது. வருடத்தில் 2 மாதம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அதிலும் கடந்த 2 சீசன்களும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடியுள்ளார். அப்படி இருந்தும் அவர் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமான கிரிக்கெட் வீரராக உள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வளவாக ஆக்டிவாக இருப்பதில்லை.

இப்படி இருக்கும் சூழலில் PR (Public Relationship) டீமை  நிர்வகிப்பது பற்றி எம்.எஸ்.தோனி ஒரு சில தகவல்களை பகிர்ந்துள்ளார். தனியார்  நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி PR டீமை நிர்வகிக்க தேவையில்லை என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், " நான் ஒருபோதும் சமூக ஊடகங்களின் பெரிய அளவில் ஆர்வமுடன் இருந்ததில்லை. எனக்கு பல்வேறு சமயங்களில் வெவ்வேறு மேலாளர்கள் (Manager) இருந்தனர், அவர்கள் அனைவரும் என்னை சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்க சொன்னார்கள்.  நான் 2004-ல் விளையாடத் தொடங்கினேன்.

அப்போது தான், ட்விட்டர் பிரபலமானது. அதன் பிறகு Instagram வந்தது. எல்லா மேலாளர்களும், 'நீங்கள் கொஞ்சம் PR டீமைநிர்வகிக்க வேண்டும். என கூறினர். நான் நன்றாக கிரிக்கெட் விளையாடினால், எனக்கு PR டீம் தேவையில்லை என்ற பதிலை தான் எப்போதும் கூறி வருகிறேன்." என்று எம்.எஸ்.தோனி கூறினார்.