Payload Logo
இந்தியா

"முதல்வராக வருவேனு நினைச்சு கூட பாக்கல"... பதவியேற்ற ரேகா குப்தா நெகிழ்ச்சி!

Author

bala

Date Published

rekha gupta cm

டெல்லி :இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1993ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்ததது. பாஜக ஆட்சி காலத்தில் சாகிப் சிங் வர்மா, மதன் லால் குரானா, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தனர். அதன்பிறகு, 27 ஆண்டுகளுக்கு பிறகு நடந்து முடிந்த தேர்தலில் 70 தொகுதிகளில் 44 தொகுதியில் பாஜக வெற்றிபெற்று டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.

முதல்வராக ரேகா குப்தா தேர்வு

பாஜக வெற்றிபெற்றதை தொடர்ந்து முதல்வராக யார் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் முடிந்த பிறகு இதற்கான ஆலோசனை இருக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து, நேற்று இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், கூட்டம் முடிந்த பிறகு  2007 மற்றும் 2012இல் டெல்லியில் கவுன்சிலர் பதவி, முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் அதிலும் வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வான ரேகா குப்தாவை டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. டெல்லியின் 9வது முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருடைய பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.

பதவியேற்பு

அதன்படி, டெல்லி முதல்வராக தேர்வாகியுள்ள ரேகா குப்தா இன்று (பிப்ரவரி 20, 2025) டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பாஜக ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

ரேகா குப்தா நெகிழ்ச்சி

பதவியேற்றுக்கொண்ட பிறகு நெகிழ்ச்சியாக பேசிய ரேகா குப்தா " நான் முதல்வராக வருவேன் என்று உண்மையில் நினைத்து கூட பார்க்கவில்லை. என்னை நம்பி எனக்கு இவ்வளவு பெரிய பதவியை வழங்கிய பிரதமர் மோடிக்கு நான் நன்றியுரை தெரிவித்து கொள்கிறேன். நிச்சயமாக எனக்கு கிடைத்திருக்கும் இந்த பெரிய பொறுப்பை நான் நேர்மையாக பயன்படுத்துவேன்.

எங்களுடைய கட்சி கொடுத்த வாக்குறுதிகள் அணைத்தையும் நிறைவேற்றுவது தான் என்னுடைய முதல் நோக்கம். முதலில் அதற்கான வேலைகளை தான் செய்வேன். எங்கள் 48 எம்எல்ஏக்களும் ஒரு அணியாக மோடியாகச் செயல்படுவார்கள்" எனவும் நெகிழ்ச்சியாக ரேகா குப்தா பேசினார்.