திருவாதிரை ஸ்பெஷல் ஏழு காய் கூட்டு செய்வது எப்படி.?
Author
k palaniammal
Date Published

சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;
காய்கறிகள் ;
மசாலா பொருட்கள்;

செய்முறை;
எடுத்து வைத்துள்ள ஏழு வகையான காய்கறிகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளை சற்று பெரிதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிதளவு உப்பு ,பெருங்காயம் மற்றும் மஞ்சள் தூள் ,தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து விட வேண்டும் .மற்றொருபுறம் துவரம் பருப்பை கழுவி நன்கு குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும் .
பிறகு மசாலா அரைக்க ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கொத்தமல்லி விதைகள், கடலைப்பருப்பு ,மிளகு ,சீரகம், வெந்தயம் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து கலந்து விட்டு ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது காய்கறி வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் எலுமிச்சை அளவு புளிகரைசலையும் சேர்த்து கலந்துவிட்டு அதன் பிறகு குழைய வேக வைத்த பருப்பையும் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
மற்றொருபுறம் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து காய்கறி கூட்டில் சேர்த்து கலந்து விட்டு மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் திருவாதிரை ஏழு காய் கூட்டு தயாராகிவிடும். இந்தக் கூட்டு செய்வதற்கு உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒற்றைப்படையில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம் .