Payload Logo
லைஃப்ஸ்டைல்

மட்டன் சுவையில் வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி.?

Author

k palaniammal

Date Published

ladish finger gravy (1) (1)

சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில்  செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்;

வெண்டைக்காய்

ladish finger (2) (1)

செய்முறை;

வெண்டைக்காயை கழுவி தண்ணீர் இல்லாமல் துடைத்து அதை மூன்று துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதில் உப்பு மற்றும் கடலை மாவு, மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வெண்டைக்காயை எண்பது சதவீதம் வதைக்கி கொள்ளவும். பிறகு அதை தனியாக வைத்துவிட்டு அதே கடாயில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் ,வெங்காயம் சேர்த்து தாளித்து அதில் இரண்டு தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

வெண்டைக்காய்

ladish finger fry (1)

இப்பொழுது உப்பு, மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், மல்லித்தூள் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். நன்கு எண்ணெய்  பிரிந்து வந்த பிறகு அரை கப் தயிர் ஊற்றி கலந்துவிட்டு மிதமான தீயில் மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயையும் சேர்த்து மூன்று நிமிடங்கள் கழித்து கரம் மசாலா ஒரு ஸ்பூன் சேர்த்து சிறிதளவு கொத்தமல்லி இலைகளை  தூவி  கலந்து விட்டு இறக்கினால்  மட்டன் சுவையில் வெண்டைக்காய் கிரேவி தயார்.