Payload Logo
இந்தியா

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து... 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

Author

gowtham

Date Published

Several labourers feared

சத்தீஸ்கர்:சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முங்கேலி  மாவட்டத்தின் சரகான் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் கட்டப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையத்தில் சிம்னியை நிறுவும் பணிகள் நடைபெற்றன. அப்போது எதிர்பாராத விதமாக சிம்னி கவிழ்ந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் அடியில் சிக்கினர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

unknown node

முதற்கட்ட தகவலின்படி, இந்த விபத்தில் இதுவரை காயமடைந்த இரண்டு தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பிலாஸ்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் பல தொழிலாளர்கள் இடிந்து விழுந்த கட்டிடத்தின் கீழ் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.