Payload Logo
சினிமா

பொங்கல் வின்னர் மதகஜராஜா? படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

Author

gowtham

Date Published

MadhaGajaRaja

சென்னை:12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரிய படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்து ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது "மதகஜராஜா" திரைப்படம்.

அட ஆமாங்க, சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார், சந்தானம் என பலர் நடித்துள்ள 'மதகஜராஜா' படம் 12 வருடங்களுக்கு பிறகு, இன்று (ஜன.,12) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பழைய காமெடி Vintage சந்தானத்தை மீண்டும் கொடுத்திருப்பதாகவும், மனோபாலாவும் பயங்கரமாக சிரிக்கவைத்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

படம் பழைய படம் என்பதை போலவே இல்லை என்றும், ரொம்ப நாள் கழித்து சிரித்து சிரித்து பார்த்த படம் என்கிறார்கள். இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ள விமர்சனங்கள் பற்றி பார்ப்போம்.

படத்தை பார்த்துவிட்டு ஒருவர் ” முதல் பாதி ஜாலியாக இருந்ததாகவும், மீண்டும் பெரிய திரையில் ஏக்கம் நிறைந்த பொழுதுபோக்கு, சுந்தர் சியின் பிரைம் கேடிவி-க்கு ஏற்ற படங்களை மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வு வருகிறது. சந்தானத்தின் காமிக் டிராக் காமெடி ஒரு பெரிய சிறப்பம்சமாகும், படம் நிச்சயமாக பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

மற்றொருவர் ” ஒரு தரமான மசாலா என்டர்டெய்னர், இதில் நகைச்சுவை அதிகம் வேலை செய்கிறது. விஷால் நடிப்பு அற்புதம், சந்தானம் காமெடி ஈர்க்கிறது. ஒரு சரியான பொங்கல் எண்டர்டெய்னரை வழங்கியுள்ளார் இயக்குனர் சுந்தர்.சி. லேட்டாத வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வந்துருக்கு"என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

மற்றொருவர் "கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படம் + பொங்கல் விழா - பொங்கல் பிளாக்பஸ்டர் ஆக போகிறது"என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node