மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!
Author
Rohini
Date Published
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின் மாமன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சூரி, மாமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று(மே 16) திரையரங்குகளில் வெளியானது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் பலரும் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். படத்தை பற்றி பேசுகையில், ” முதல் பாதி நகைச்சுவை மற்றும் குடும்ப தருணங்களுடன் நகர்ந்து, இரண்டாம் பாதி நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த உணர்ச்சிகரமான பூர்வமான கதையை விளக்குகிறது. அக்கா பையன் மீது அதீத பாசம் வைத்திருக்கும் சூரிக்கு, அதனால் கல்யாண வாழ்வில் ஏற்படும் பிரச்னையே ‘மாமன்’ ப்ளஸ்.
சூரி, ராஜ்கிரண், சுவாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி என அ னைவரின் நடிப்பும் சூப்பர். முதல் 30 நிமிடங்கள் செம அழகாக இருக்கிறது. மேலும், பாடல்கள் தரமான ரகம். ப்ளஸ், மைனஸ் என இரண்டுயுமே பார்த்தால், படத்தின் எமோஷனலான காட்சிகள்தான். மொத்தத்தில் குடும்பப் பார்வையாளர்களுக்கு இது ஒரு நிச்சயமான வெற்றி! படமாக இருக்கும்.