Payload Logo
லைஃப்ஸ்டைல்

திருவாதிரை களி ரெசிபி அசத்தலான செய்முறை இதோ..!

Author

k palaniammal

Date Published

thiruvathirai kali (1)

சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி  ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள்;

Raw rice (8) (1)

செய்முறை;

எடுத்து வைத்துள்ள பச்சரிசியை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இப்போது இவற்றை ஆறவைத்து ரவை பதத்திற்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள  வெல்லம் மற்றும் தண்ணீரை ஊற்றி ஒரு கொதி விட்டுக் கொள்ளவும்.

jaggery (12) (1)

பிறகு வெல்லம்  கரைந்ததும் அதில் ஏலக்காய் தூள் சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள மாவையும் சேர்த்து கைவிடாமல் கலந்து விடவும். அதன் பிறகு துருவிய தேங்காயையும் சேர்த்து கலந்து விட்டு மற்றொருபுறம் நெய்யை சூடாக்கி அதில் முந்திரியை வறுத்து எடுத்து களியில்  சேர்த்து கலந்து விட்டு இறக்கினால்  தித்திக்கும் சுவையில்  திருவாதிரை களி தயார்.