Payload Logo
லைஃப்ஸ்டைல்

உங்கள் கடினமான கைகளை மிருதுவான கைகளாக மாற்ற சூப்பரான டிப்ஸ் இதோ..!

Author

k palaniammal

Date Published

hand care

Soft Hand-நம்மில் பலரும் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கைகளுக்கு கொடுப்பதில்லை அதனால் எளிதாகவே கைகள் அதிக சுருக்கமாகவும் ,கடினமான தோலையும் விரைவில் ஏற்படுத்தி விடும். இவற்றை சரி செய்ய எளிமையான வீட்டுக் குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம்.

உங்கள் கைகள் மென்மையாக மாற குறிப்புகள்:எலுமிச்சை சாறில் சர்க்கரை மற்றும் கற்றாழை ஜெல் இவற்றை கலந்து கைகளில் மசாஜ் செய்யவும் இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து வரவும். பிறகு கைகளில் விளக்கெண்ணெய் மற்றும் முகத்தில் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு கிரீம் இவற்றை நன்கு கலந்து கைகளில் பூசி வரவும். இவ்வாறு தொடர்ந்து நாம் செய்து வந்தால்  கரடு முரடான கைகள் கூட விரைவில் மென்மையானதாக மாறும்.

கைகளில் சுருக்கம் நீங்க குறிப்புகள்:

கைகள் வறட்சி  அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அதற்கு தினமும் இரவில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போன்ற எண்ணெயை  கைகளில் தடவிக் கொள்ளவும். நீர்ச்சத்து உள்ள பழங்கள், காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். நம் உடலில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் கைகளில் வறட்சி ஏற்படும்.

எனவே இந்த குறிப்புகளை பயன்படுத்தினால் கரடு முரடான கைகள் கூட மென்மையாகி விடும் .