Payload Logo
லைஃப்ஸ்டைல்

பித்த வெடிப்பு குறைய சூப்பரான டிப்ஸ் இதோ..!

Author

k palaniammal

Date Published

cracked heel

உடலில் சூடு அதிகமானால் அதை வெளிப்படுத்தும் விதமாக தான் காலில் வெடிப்பு தோன்றுகிறது இந்த வெடிப்பை எவ்வாறு சரி செய்யலாம் மற்றும் இந்தப் பித்த வெடிப்பு வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்..

பித்த வெடிப்பு ஏற்பட காரணங்கள்உடல் எடை அதிகரிப்பு, உடல் வெப்பம் ,குடலில் புழுக்கள் அதிகரித்தால் நம் பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.

பாத வெடிப்பு நீங்க

தவிர்க்க வேண்டிய உணவுகள்நண்டு ,கருவாடு, ஊறுகாய் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள், கத்திரிக்காய், சோளம் போன்ற உணவுகளை தவிர்ப்பது அதை மீண்டும் அதிகப்படுத்தாமல் இருக்கும்.

வராமல் தடுப்பது எப்படிவாரம் ஒரு முறையேனும் நல்லெண்ணெய் குளியல் செய்ய வேண்டும். குளித்தல் என்றாலே அதிகாலையில் தலையுடன் குளிப்பதே  சரியான முறையாகும். ஏனெனில் இரவு முழுவதும் நம் உடலில் உள்ள வெப்பம் அதிகமாக இருக்கும் இந்த வெப்பம் தலையில் தான் இருக்கும் ஆகவே தலையுடன் குளிப்பதே சிறந்தது.

போதுமான அளவு எண்ணெய் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்களும் இருப்பதால் நம் உடலுக்கு தேவையான கொழுப்புச் சத்தும் சேர்த்துக் கொள்ள வேண்டும், இதனால் வறட்சிஆகாமல் இருக்கும் .  வீட்டில் பெரியவர்களுக்கு ஏதேனும் உடலில் பிரச்சனை காரணமாக எண்ணெய் சேர்க்காமல்  இருக்கலாம் ஆனால்  வளரிலும் குழந்தைகளுக்கும் எண்ணெய்  உணவுகளை கொடுப்பதில்லை இவ்வாறு செய்யாமல் போதுமான அளவு கொழுப்பு  உணவுகளையும் வளரிலும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ஆகவே பாதங்களை வறட்சி ஆகாமல்  வைத்து கொள்ளுங்கள்.