ச்சீ, இதுதான் காரணமா? எலான் மஸ்க் மகனால் டிரம்ப் அலுவலகத்திற்கு புதிய மேஜை?
Author
manikandan
Date Published

வாஷிங்டன்:அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க வைக்கின்றன. இதனால் அவர் செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட பெரும் பேசுபொருளாக மாறிவருகிறது. அதற்கொரு உதாரணமாக தற்போது ஒரு சம்பவம் நிகந்துள்ளது.
அதாவது, வாஷிங்டன்னில் உள்ள ஓவல் மைதானத்தில் இருக்கும் தனது மேஜையை டொனால்ட் டிரம்ப் மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளார். ஒரு புதிய ஜனாதிபதி பொறுப்பேற்ற உடன், தனக்கு பிடித்த அலுவலக மேஜையை 7 பாரம்பரிய மேஜைகளில் ஒன்றில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேஜை மாற்றம் :
மேலும், இந்த மேஜையானது, மிகவும் பிரபலமானது என்றும் இதனை முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் புகழ்பெற்ற மற்ற நபர்கள் பயன்படுத்தினார்கள் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த மேஜை தற்காலிகமாக வெள்ளை மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரெசலூட் மேசை லேசாக புதுப்பிக்கப்படுகிறது. இது மிக முக்கியமான வேலை இல்லை. இது ஒரு அழகான தற்காலிக மாற்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்னணியில்?
மேலோட்டமாக பார்த்தல் இது ஒரு சாதாரண சம்பவம் தான். ஆனால் இதனையும் சில தினங்களுக்கு முன்னர் எலான் மஸ்க் மகன் ஜனாதிபதி அலுவலகம் வந்ததையும் குறிப்பிட்டு அமெரிக்க ஊடகங்களான நியூயார்க் போஸ்ட் மற்றும் நியூயார்க் டெய்லி நியூஸ் போன்ற தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதாவது, பிரபல தொழிலதிபரும் அமெரிக்க DOGE அமைப்பு தலைவருமான எலான் மஸ்க் மற்றும் மஸ்க் - பாப் நட்சத்திரம் கிரிம்ஸ் ஆகியோருக்கு பிறந்த மகனுடன் டிரம்பை சந்திக்க ஓவல் அலுவலகத்திற்கு சென்றுள்ளார் என்றும் அப்போது மஸ்கின் மகன் மூக்கை துடைத்துவிட்டு அப்படியே மேஜை மீது கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை குறிப்பிட்டு தான் மேஜையை டிரம்ப் மாற்ற சொல்லி இருக்கலாம் என அமெரிக்க செய்தி நிறுவனங்கள் சில தகவல் வெளியிட்டு வருகின்றன.
மேஜையின் வரலாறு :
டிரம்ப் மாற்ற சொன்ன இந்த மேஜை மிகவும் பழமை வாய்ந்தது என்றும் ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி 1961-ல் இதைப் பயன்படுத்தினார், பின்னர், ஜனாதிபதிகள் ஜிம்மி கார்ட்டர், பில் கிளிண்டன், பராக் ஒபாமா மற்றும் ஜோ பிடன் ஆகியோர் பதவியில் இருந்தபோது இதைப் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.