Payload Logo
இந்தியா

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து... 3 பேர் பலி!

Author

bala

Date Published

IndianCoastGuard

குஜராத் :இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5) குஜராத்தின் போர்பந்தரில் வழக்கமான பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் உட்பட மொத்தம் 3 பேர் இருந்தனர். இந்த சம்பவத்தில் மூவரும் உயிரிழந்ததாக ஐசிஜி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மதியம் 12:10 மணியளவில் நடந்ததாக போர்பந்தர் காவல்துறை கண்காணிப்பாளர் பகீரத்சிங் ஜடேஜா தெரிவித்தார்.

போர்பந்தர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது மூன்று பணியாளர்களுடன் ICG இன் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH) விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று பணியாளர்களும் ஹெலிகாப்டரில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு பலத்த தீக்காயங்களுடன் போர்பந்தரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இவர்கள் இறந்துவிட்டதாக தகவலை தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் விபத்தில் இறந்தவர்கள் பற்றி  உறுதிப்படுத்தியதுடன், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.